/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உச்சிப்புளி ரயில்வே கேட் பழுது காரணமாக ராமேஸ்வரம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : நவ 05, 2024 05:11 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் உச்சிப்புளி பகுதியில் அமைந்துஉள்ள தானியங்கி ரயில்வே கேட் பழுதுகாரணமாக நான்கரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும்நெடுஞ்சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. இங்கு தானியங்கி ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
நேற்று காலை 7:30 முதல் மதியம் 12:00 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அக்., 25ல் இதே போல் ரயில்வே கேட் பழுது காரணமாக மூடப்பட்ட கேட் திறக்க முடியாமல் நான்கு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது போன்று நேற்றும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சாலை வழியாகத்தான் வெளி மாநில சுற்றுலா பயணிகள், அத்தியாவசியதேவையான ஆம்புலன்ஸ், முக்கிய அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் பயணிக்கின்றனர். போக்குவரத்து பாதித்தால் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
ரயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து ரயில்வே கேட்டில் உள்ள பழுதினை நீக்கி பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.