ADDED : ஏப் 23, 2024 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : நேற்று (ஏப்.22) உலக பூமி தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், தடகள பயிற்சியாளர் ஹனிபா, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சந்தைப்பேட்டை கான்சாகிப் தெரு அங்கன்வாடி மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பணியாளர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு, மண்வளம் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தனர். இயற்கை ஆர்வலர் எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

