ADDED : செப் 14, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகை அபிேஷகங்கள் நடந்தது.
மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.