/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் படி ஏறி சிரமப்படும் முதியவர்கள்
/
எஸ்.பி., அலுவலகத்தில் படி ஏறி சிரமப்படும் முதியவர்கள்
எஸ்.பி., அலுவலகத்தில் படி ஏறி சிரமப்படும் முதியவர்கள்
எஸ்.பி., அலுவலகத்தில் படி ஏறி சிரமப்படும் முதியவர்கள்
ADDED : மார் 06, 2025 03:58 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புதன் தோறும் குறைதீர்க்கும் நாளில் வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மாடிப்படி ஏறிச்சென்று மனு அளிக்க சிரமப்படுகின்றனர். எனவே கீழே உள்ள கூட்ட அரங்கத்தில் மனு வாங்குவதற்கு எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் வாரந்தோறும் புதன் கிழமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மனு அளிக்க வருகின்றனர்.
ஆரம்ப காலத்தில் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கீழே உள்ள கூட்ட அரங்கத்தில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினர்.
கடந்த சில மாதங்களாக கீழே மனுக்களை பதிவு செய்கின்றனர். அதன் பிறகு எஸ்.பி.,யிடம் மனு அளிக்க 2வது மாடிக்கு சென்றுவர வேண்டியுள்ளது. அப்போது மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மாடிப்படி ஏறிச்செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே கீழ்தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மனுக்களை விசாரணை செய்ய எஸ்.பி., சந்தீஷ் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.