/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் உயிருக்கு போராடிய மூதாட்டி மீட்பு
/
ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் உயிருக்கு போராடிய மூதாட்டி மீட்பு
ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் உயிருக்கு போராடிய மூதாட்டி மீட்பு
ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் உயிருக்கு போராடிய மூதாட்டி மீட்பு
ADDED : மார் 13, 2025 04:47 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் நனைந்து உயிருக்கு போராடிய மூதாட்டி மீட்கப்பட்டு சிகிச்சைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ராமநாதபுரத்தில் ஏ.வி.எம்.எஸ்., பள்ளி அருகே 75 வயது மூதாட்டி தெருவோரத்தில் கிடந்தார். ராமநாதபுரத்தில் பெய்து வரும் கனமழையில் நனைந்து குளிரில் உயிருக்கு போராடிகொண்டிருந்தார். இது குறித்து தாய்ப்பாசம் அறக்கட்டளைக்கு தெரிவித்தனர்.
அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா மற்றும்பெண்கள் பாதுகாப்பு மையம், போலீசார் அங்கு சென்றனர். அந்த மூதாட்டி பெயர் ராஜம்மாள் 75, என்பதும், ஆதரவற்ற நிலையில் தெருவில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
உடலை சுத்தம் செய்து புத்தாடைகள் மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு கமுதக்குடியில் செயல்பட்டு வரும் தர்மகரங்கள் முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.