ADDED : ஜூலை 01, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள புனித பேதுரு சர்ச் திருவிழா ஜூன் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் 8:30 மணிக்கு தேர்பவனி நடந்தது. முன்னதாக பாதிரியார் சாமுவேல் இனியன் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் பலர் பங்கேற்றனர்.
புனித பேதுரு அமர்ந்த தேர் முக்கிய தெருக்கள் வழியாக சர்ச்சை சென்றடைந்தது.
விழாவை முன்னிட்டு வாணவேடிக்கைகள் நடந்தன. சர்ச் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யபட்டிருந்தது.