/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் விழிப்புணர்வு- டூவீலர்களில் ஊர்வலம்
/
தேர்தல் விழிப்புணர்வு- டூவீலர்களில் ஊர்வலம்
ADDED : மார் 28, 2024 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி டூவீலர்களில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை சின்னக்கீரமங்கலத்தில் இருந்து திருவாடானை தாலுகா அலுவலகம் வரை டூவீலர் ஊர்வலம் நடந்தது.
தாசில்தார் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். டூவீலர்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

