/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சட்டசபை தொகுதிவாரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்வு
/
சட்டசபை தொகுதிவாரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்வு
சட்டசபை தொகுதிவாரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்வு
சட்டசபை தொகுதிவாரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்வு
ADDED : ஏப் 08, 2024 11:53 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தலுக்கு சட்டசபை தொகுதிவாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கம்ப்யூட்டரில் ரேண்டம் முறையில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி நடந்தது.
ராமநாதபுரம் லோக்சபா தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். கம்ப்யூட்டரில் ரெண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரமக்குடி அபிலாஷா கவுர், திருவாடனை மாரிச்செல்வி, முதுகுளத்துார் மாரிமுத்து, ராமநாதபுரம் ராஜ மனோகரன், வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர்.