தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாக்காளர் பட்டியல் பணிகள் துவக்கம்

வாக்காளர் பட்டியல் பணிகள் துவக்கம்

வாக்காளர் பட்டியல் பணிகள் துவக்கம்


ADDED : ஆக 20, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை : திருவாடானை தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை 2025 ஜன.,க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளதால் திருவாடானை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. திருவாடானை தாலுகா தேர்தல் துணை தாசில்தார் இந்திரஜித் கூறியதாவது:

தொகுதியில் 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களுக்கு அந்தந்த ஓட்டுப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். வாக்களர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படும். மற்றும் இரண்டு பதிவு உள்ள வாக்காளர் பெயர்களில் தவறானது நீக்கப்படும்.

மேலும் கிராமங்களில் வீடு தோறும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முகாம் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us