/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
/
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
ADDED : ஆக 21, 2024 08:50 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி தர்ணா போராட்டம் நடத்தினர்.
மின் வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பிரிவுக்கு இரண்டு பேர் ஒப்பந்த முறையில் பணி நியமனம் என்பதை கைவிட வேண்டும். சம்பளம் இல்லாமல் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., திட்ட பொருளாளர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் காசிநாதன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி உழைக்கும் பெண்கள் அமைப்பின் கன்வீனர் மாலா, பரமக்குடி கோட்ட செயலாளர் முருகேசன்.
ராமநாதபுரம் கோட்டத்தலைவர் சசிக்குமார், நிர்வாகிகள் கமுதி ஆறுமுகம், சிக்கல் செந்தில்குமார், திருவாடனை கண்ணன், உத்தரகோசமங்கை பாசில், மாவட்ட நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். திட்ட தலைவர் முருகன், மாநில துணைத்தலைவர் குருவேல் ஆகியோர் நிறைவு செய்து பேசினர்.

