/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
எமனேஸ்வரம் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
எமனேஸ்வரம் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
எமனேஸ்வரம் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2024 11:40 PM
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ராதா, மாநில பொதுச்செயலாளர் ராஜன், மாநில செயலாளர் பெருமாள், உறுப்பினர்கள் கோவிந்தன், ருக்குமாங்கன், சிவக்குமார் பேசினர்.
கைத்தறி நெசவுத் தொழிலை பாதிக்கும் ஜி.எஸ்.டி., வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான அனைத்து ஜவுளி ரகங்களையும் கோ--ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்ய வேண்டும். பருத்தி, பட்டு நுால்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். 58 வயதான அனைத்து கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கும் ரூ.6000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பரமக்குடியில் படுகொலை செய்யப்பட்ட மேகலாவின் பெண் குழந்தைகளுக்கும் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கி துணை நிற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகக் குழு உறுப்பினர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

