/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இமானுவேல் சேகரன் நினைவு மண்டபம் பணி
/
இமானுவேல் சேகரன் நினைவு மண்டபம் பணி
ADDED : செப் 08, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு மண்டபம் கட்டும் பணியை கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன் பார்வையிட்டார்.
பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. இதற்காக ரோடு வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபம், பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டட கட்டுமானப் பணியை கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பார்வையிட்டு விரைந்து பணி செய்ய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், டி.எஸ்.பி., சபரிநாதன், தாசில்தார் சாந்தி உள்ளிட்ட துறை அதிகாரிகள் இருந்தனர்.