/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மரகத பூஞ்சோலை பூங்கா மாணவர் விடுதி திறப்பு விழா
/
மரகத பூஞ்சோலை பூங்கா மாணவர் விடுதி திறப்பு விழா
ADDED : ஆக 15, 2024 03:58 AM

ராமநாதபுரம் : மண்டபம் ஒன்றியம் ஆற்றங்கரை, அச்சடிபிரம்பில் புதிதாகஅமைக்கப்பட்டுள்ள மரகத பூஞ்சோலை பூங்கா,ராமநாதபுரத்தில் புதிதாக கட்டியுள்ள ஆதிதிராவிடர் நலமாணவர் விடுதி ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலிகாட்சியில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலெக்டர்சிம்ரன்ஜீத் சிங் காலோன் மண்டபம் ஊராட்சி ஒன்றியம்ஆற்றாங்கரை, அச்சடிப்பிரம்பு ஆகிய இடங்களில் தலா ரூ.25லட்சத்தில் அமைக்கப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்காக்களைகுத்து விளக்கேற்றி பூங்காவை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில்ரூ.3 கோடியே 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆதிதிராவிடர்நல மாணவர் விடுதி திறப்பு விழாவில்கலெக்டர் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாவட்ட வன அலுவலர் ஹேமலதா,தாட்கோ துறை செயற்பொறியாளர் பச்சவடிவு , ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி, தாட்கோ துறை மற்றும்வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்பங்கேற்றனர்.