/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
/
சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2024 05:32 AM
ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கரையோரம் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் மழைக்காலங்களில் தேக்கப்படும் முழு கொள்ளளவு நீரான 1205 மி.,கன அடியால் 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. பெரிய கண்மாயின் கீழ் உள்ள விளை நிலங்களுக்கு பெரிய கண்மாயில் உள்ள 20 பாசன மடைகள் மூலம் விவசாயிகள் தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.
பாசன மடைகள் அமைந்துள்ள பெரிய கண்மாய் கரை 20 கி.மீ., கொண்டது. இதனால் பாசன மடைகளுக்கு விவசாயிகள் எளிதில் சென்று வரும் வகையில் கண்மாய் கரை வழியாக கிராவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கண்மாய் கரையில் சாலையின் இருபுறங்களிலும் சீமைக் கருவேல முள் மரங்கள் தற்போது வளர்ந்துள்ளன.
இதனால் மழைக்காலங்களில் பாசன மடைகளுக்கு செல்லும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே துறை அதிகாரிகள் மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகள் பாசன மடைகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் கரையின் இரு ஓரங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.