/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நுாலக கட்டடம் சீரமைக்க வலியுறுத்தல்
/
நுாலக கட்டடம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 14, 2024 04:44 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது.
இங்கு பல்வேறு நகர் பகுதிகளுக்கு செல்வதற்கு பஸ் வசதி உள்ளதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதிக மக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் அப்பகுதியில் கிளை நுாலகம் அமைக்கப்பட்டது.
இந்த கிளை நுாலக கட்டடம் பல பகுதியில் சேதமடைந்தும் கூரையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் சேதமடைந்த நுாலக கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

