தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி

வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி

வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 16, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் கனடா இந்தியா கூட்டு பயிலகத் திட்டத்தின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் சேக்தாவூத் தலைமை வகித்து பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளாக 100 சதவீதம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். துணை முதல்வர் கணேஷ்குமார் வரவேற்றார்.

சென்னை பயிற்சி குழு வாரியத்தின் துணை இயக்குனர் சுரேஷ்குமார் பங்கேற்று தனியார் வேலை வாய்ப்புகள், உயர்கல்வி மற்றும் தொழில் முனைவு பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

இறுதியாண்டு மாணவர்கள் 250 பேர் பங்கேற்றனர். மின்னியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us