/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மார் 11, 2025 04:49 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் ரோட்டோர கடைகளின் ஆக்கிரமிப்புகள் பொது இட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் ரோட்டோரங்களில் விஸ்தாரமான இடவசதி ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக இருப்பதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும், வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கும் தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் பகுதியாக உள்ளன.
இதனால், வர்த்தக நிறுவனங்கள், ரோட்டோரங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் முகப்பு பகுதியில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ரோடு குறுகி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஏ.டி.எஸ்.பி, தனுஷ் குமார் தலைமையில் தாசில்தார் வரதராஜன், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரம்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் டி.டி.மெயின் ரோடு, பரமக்குடி ரோடு, பஜார் ரோடு, புல்லமடை ரோட்டில் விஸ்தாரமான இடவசதி கிடைத்துள்ளது.
இதனால், வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை எளிதாக நிறுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.