/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெரு நடுவில் ஆக்கிரமிப்பு கற்கள்; அவசர வாகனங்கள் தவிப்பு
/
தெரு நடுவில் ஆக்கிரமிப்பு கற்கள்; அவசர வாகனங்கள் தவிப்பு
தெரு நடுவில் ஆக்கிரமிப்பு கற்கள்; அவசர வாகனங்கள் தவிப்பு
தெரு நடுவில் ஆக்கிரமிப்பு கற்கள்; அவசர வாகனங்கள் தவிப்பு
ADDED : ஜூன் 27, 2024 11:30 PM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பாண்டியன் தெருவை ஆக்கிரமிக்கும் வகையில் நடுவில் கற்களை நட்டு வைத்துள்ளதால் அவசர வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் தார் ரோடு, பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டியன் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார் ரோடு அமைக்கப்பட்டது.
பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டுடன் இணைக்கும் வகையில் பாண்டியன் தெரு 20 அடி வரை அகலம் கொண்டதாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளத்துடன், தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. மேலும் சர்வீஸ் ரோட்டில் இருந்து பாண்டியன் தெரு வழியாக சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம் மற்றும் வங்கி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும்.
ஆனால் ரோடு அமைக்கப்பட்ட நிலையில் சர்வீஸ் ரோட்டில் இருந்து பாண்டியன் தெரு செல்லும் பகுதியில் ஆக்கிரமிக்கும் வகையில் ரோட்டின் நடுவில் இரண்டு கற்களை நட்டு வைத்துள்ளனர்.
இதனால் ஆட்டோ, கார், பள்ளி வாகனங்கள், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்படும். ஆகவே தெருவை ஆக்கிரமிக்கும் வகையில் நட்டு வைத்துள்ள கற்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

