/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
கீழக்கரையில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 15, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை நாளை (ஜூலை 16) அகற்றும் பணி நடக்கிறது.
கீழக்கரை போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர், நகர் அமைப்பு பிரிவினர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை நாளை (ஜூலை 16) அகற்றும் பணி நடைபெற உள்ளது.
எனவே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ளவும், தவறும் பட்சத்தில் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.