/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இயந்திரம் பழுது: 45 நிமிடம் தாமதம்
/
இயந்திரம் பழுது: 45 நிமிடம் தாமதம்
ADDED : ஏப் 20, 2024 05:07 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால் 45 நிமிடம் ஓட்டுப்பதிவு தாமதமானது.
ராமேஸ்வரம் வேர்க்கோட்டில் உள்ள புனித ஜோசப் பள்ளி வளாகத்தில்6 ஓட்டுச் சாவடிகளில் நேற்று காலை 7:00 மணி முதல் ஏராளமான வாக்காளர்கள் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதில் 313வது ஓட்டுச் சாவடியில் காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு இயந்திரம் பழுதானதால் ஓட்டுப் பதிவை அதிகாரிகள் நிறுத்தினர். பின் பொறியாளர் வரவழைக்கப்பட்டு இயந்திரத்தை சரி செய்தனர். இதனால் 45 நிமிடம் தாமதமாக ஓட்டுப் பதிவு துவங்கியது. இதனால் வாக்காளர்கள் வெயிலில் காத்திருந்து அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியில் காளியம்மாள் 65, ஓட்டு போட சென்றார். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிகாரிகள்திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
மேலும் ராமேஸ்வரம்அருகே பாம்பன் அந்தோனியார்புரம் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டு சாவடியில் இருமுறை ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதாகி, அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

