/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழில்முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
தொழில்முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 10, 2024 04:39 AM
ராமநாதபுரம்: சிறப்பாக செயல்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள் மாவட்ட, மாநில அளவில் 2023---24-ல் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
இவ்விருதுகள் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. மாநில அளவில் சிறந்த வேளாண், மகளிர், நலிந்த, ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் ஆகிய பிரிவுகளில் விருதுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் மாநில அளவில் சிறந்த தரம், ஏற்றுமதிக்கான விருது, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது என 6 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் மே 20க்குள் awards.fametn.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உயர்மட்ட குழுவினர் விண்ணப்பங்களை பரிசீலித்துவிருது பெறும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.