/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீர்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி
/
நீர்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி
நீர்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி
நீர்ப் பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி
ADDED : ஜூன் 25, 2024 11:03 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர்ப்பாசன மேலாண்மை மற்றும் நவீனமயமாக்கும் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி உழவர் உற்பதியாளர் நிறுவனங்களுக்குவழங்கப்பட்டது.
வேளாண் இணை இயக்குநர் கண்ணையா தலைமை வகித்தார். துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மோகன்ராஜ் வரவேற்றார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண் துணை இயக்குநர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன்.
தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம், விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா, மீன் வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வேளாண் உணவை பதப்படுத்தும் தொழில் துவங்க ஆர்வமாக உள்ள வேளாண் பட்டதாரிகள், வணிகர்கள், உணவு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ., அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன் பெற முடியும்.
வேளாண் உணவை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல், சிப்பம் கட்டுதல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கடன் உதவி பெறுவது குறித்து மண்டல வேளாண் நிபுணர் ஜெபஸ்டின் விரிவாக எடுத்துரைத்தார். புதிய வேளாண் தொழில் முனைவோர்களாக இருப்பின் 40 சதவீதம் அல்லது 2 லட்சம் வரை மானியம் பெற முடியும்.
செயல்பாட்டில் உள்ள வேளாண் தொழில் முனைவேராக இருப்பின் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் வரை மானியத்தில் வங்கி கடன் பெற முடியும். வங்கி கடன் வசதி பெறுதல் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் தொழில் முனைவோருக்கான வர்த்தக வாய்ப்புகள் பற்றி முன்னோடி வங்கி அலுவலர் அசோக், தொழில் நிறுவன நிபுணர்கள் அசோக்குமார், அருணாச்சலம், கிேஷார்குமார் ஆகியோர் விரிவாக பேசினார்கள். பரமக்குடி வேளாண் அலுவலர் வணிகம் உலகுசுந்தரம் நன்றி கூறினார்.