ADDED : ஜூன் 05, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி. எஸ்.ஐ கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை கல்லுாரி வளாகத்தில் நட்டனர்.
ஒவ்வொரு மாணவர்களும் அவர்களது வீட்டின் முன் அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தில் அல்லது அருகாமையில் ஒரு மரக்கன்று நட்டு அதை வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.––––––
