ADDED : பிப் 24, 2025 04:07 AM
அ நிறம் | அளவு
நயினார்கோவில்: நயினார்கோவில் ஒன்றியம் தாளையடிக்கோட்டையில் வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தில் மாதிரி கிராம சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாளையடிக்கோட்டை பள்ளி மாணவர்கள், நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி கிராம தங்கல் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) அமர்நாத் துவக்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இதில் நீர் நிலைகள் பற்றிய விழிப்புணர்வு, தண்ணீர் வரவு, செலவு அறிக்கை தயாரித்தல், ஒற்றைச் சாளர தகவல் மையம் அமைத்தல் போன்ற பணிகள் நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
