/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
ADDED : மே 04, 2024 04:52 AM
பரமக்குடி: பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி செயலாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) அல்போன்சா வரவேற்றார்.
கச்சாத்தநல்லூரில் சோலைமலை டாக்டர் வரதராஜன் உருவாக்கியுள்ள சாரதா மூலிகை தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
அப்போது மூலிகைகளின் பயன்பாடுகள் குறித்தும், இயற்கையான முறையில் உடல் ஆரோக்கியத்தை பேணுவது பற்றியும் பேசினர்.
தொடர்ந்து சிறுதானியங்களை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் விளக்கப்பட்டது. மேலும் கோடை காலத்தில் வெப்பம் தாக்காமல் இருக்க ஆரோக்கிய உணவுகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விரிவுரையாளர்கள் ஜெயபிரியா, கார்த்திகா, மோகன்தாஸ், விஜயலட்சுமி, அமலி பங்கேற்றனர்.
மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். சரத்குமார் நன்றி கூறினார்.