/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுற்றுச்சூழல் பாதிப்பு: மூச்சுத்திணறல்
/
சுற்றுச்சூழல் பாதிப்பு: மூச்சுத்திணறல்
ADDED : ஏப் 27, 2024 04:16 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி சார்பில் கிழக்கு கடற்கரைசாலை அருகில் உள்ள நகராட்சி குப்பை  கிடங்கில் அடிக்கடி தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன் அருகில் குடியிருப்பு மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் குப்பை பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்புரவு தொழிலாளர்கள் குப்பையை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இந்தப் பகுதியில் காலை நடை பயிற்சி செல்பவர்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை அருகில் இருப்பதால் புகை ரோட்டில் சூழ்வதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.நகராட்சி நிர்வாகத்தினர்நடவடிக்கை எடுத்து குப்பையை அகற்றி தரம் பிரித்து அதனை உரமாக மாற்றுவதை விடுத்து இது போன்ற செயல்களால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.

