/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அ.தி.மு.க., ஆட்சி நல்லாட்சி என்று பேசியதால் கட்சியில் இருந்து நீக்கம் காங்.,முன்னாள் எம்.எல்.ஏ., பேச்சு

ADDED : ஆக 13, 2024 12:19 AM
முதுகுளத்துார் : பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., நல்லாட்சி நடத்துவதாக முன்பு பேசியதற்காக தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக முன்னாள் காங்., எம்.எல்.ஏ., பாண்டியன் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் மத்திய ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் செல்வநாயகபுரம் கிராமத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன் முன்னிலை வகித்தார். அவர் பேசியதாவது:
கடந்த 2016ம் ஆண்டு எம்.எல்.ஏ.,வாக இருந்த போது அப்போதைய அ.தி.மு.க., ஆட்சி நல்லாட்சி என்றும் முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசினேன்.
இதனை காரணம் காட்டி காங்., கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். இதனால் தான் அ.தி.மு.க.,வில் சேர்ந்தேன். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்றார்.