ADDED : ஜூலை 11, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் முகாம் அலுவலகம் பகுதியில் உள்ள மரத்தில் இருந்த வவ்வால்கள் வெடி வெடித்து விரட்டியடிக்கப்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் முகாம் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ள பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கில் வவ்வால்கள் தங்கியிருந்தன. இதனால் அப்பகுதியில் அதிக ஒலி சத்தம், துர்நாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வவ்வால்களை விரட்டுவதற்காக அந்த பகுதியில் வெடிகள் வெடிக்கப்பட்டன. சத்தத்தை கேட்டு மிரண்ட வவ்வால்கள் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் சுற்றித்திரிந்தன. சில வவ்வால்கள் சத்தத்தில் குழம்பி இடம் பெயர்ந்தன.
