/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாசாணி அம்மன் கோயில் கொடிமரம் இறக்கம்
/
மாசாணி அம்மன் கோயில் கொடிமரம் இறக்கம்
ADDED : ஜூன் 23, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம்அருகே பாரனுார் மாசாணியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், பூக்குண்டம் இறங்குதல் உள்ளிட்டவை நடந்தது.
மூலவர் அம்மனுக்கு தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய விழாவான பூக்குண்டம் இறங்கும் விழாவை தொடர்ந்து கோயில் கொடிமரம் இறக்கும் விழா நடைபெற்றது.
முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடிமரம் இறக்கப்பட்டது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் ஆத்தியாடி முனீஸ்வரன் கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று முளைப்பாரிகளை மாசாணியம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.

