/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேங்காய் காய்ப்பு இல்லை விவசாயிகள் வேதனை
/
தேங்காய் காய்ப்பு இல்லை விவசாயிகள் வேதனை
ADDED : செப் 03, 2024 02:35 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் தேங்காய் விலை உயர்ந்தும் போதுமான விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது.
தென்னை மரங்களில் வெள்ளை ஈ பாதிப்பால் தேங்காய் விளைச்சல் 3 ல் 2 மடங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு குலையில் 25 காய்கள் காய்க்கும் இடத்தில் தற்போது 7 காய்கள் மட்டுமே காய்த்துள்ளன. தேங்காய் விலை 8 முதல் 10 ரூபாயாக இருந்தது. தற்போது 12 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தும் விளைச்சல் இல்லாததால் வருமானம் இல்லாத நிலையில் விவசாயிகள் தவிக்கின்றனர். கொப்பரை கிலோவுக்கு 100 முதல் 105 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
தேங்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகள் சங்க மணி மாதவன் கூறியதாவது:
ஆண்டுக்கு 6 முதல் 7 பறிப்புகள் வரை தேங்காய் கிடைக்கும். இதனால் இந்த ஆண்டு வெள்ளை ஈ பிரச்னையால் மூன்றில் ஒரு பங்கு தான் விளைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்தும் விவசாயிகள் செலவிட்ட தொகை கூட கிடைக்கவில்லை. மேலும் பறிப்பு கூலி உயர்வு பிரச்னையும் விவசாயிகளை பாதிக்கிறது என்றார்.