/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வலது இடது பிரதான கால்வாய்களில் குப்பை கழிவுகள் கழிவுநீரால் விவசாயிகள் வேதனை
/
பரமக்குடி வலது இடது பிரதான கால்வாய்களில் குப்பை கழிவுகள் கழிவுநீரால் விவசாயிகள் வேதனை
பரமக்குடி வலது இடது பிரதான கால்வாய்களில் குப்பை கழிவுகள் கழிவுநீரால் விவசாயிகள் வேதனை
பரமக்குடி வலது இடது பிரதான கால்வாய்களில் குப்பை கழிவுகள் கழிவுநீரால் விவசாயிகள் வேதனை
ADDED : ஏப் 12, 2024 04:32 AM

பரமக்குடி: -பரமக்குடி பகுதிகளில் வலது, இடது பிரதான கால்வாய்களில் குப்பை கொட்டப்படுவதுடன் கழிவு நீர் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுார் வைகை ஆற்றில்மதகு அணை உள்ளது. இங்கிருந்து வலது, இடதுபிரதான கால்வாய்கள்,வெள்ளப் போக்கி கால்வாய் என பிரிகிறது. தொடர்ந்து வைகை ஆற்றின் ஷட்டர்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீர் நேரடியாக ராமநாதபுரம் பெரியகண்மாயை அடைகிறது.
மேலும் வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் நுாற்றுக்கணக்கான கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன்வெள்ளப் போக்கி கால்வாய்கள் வழியாக முதுகுளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் ஒட்டு மொத்தமாக நகராட்சி, பேரூராட்சி உட்பட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய்களில் விடப்படுவது வாடிக்கையாக உள்ளது.
மேலும் தெருக்களில் அள்ளப்படும் குப்பை கால்வாய் ஓரங்களில் வசிக்கும்மக்களும் தண்ணீர் செல்லும் பாதையை கண்டு கொள்ளாமல் குப்பை கொட்டி மேடாக்கி வருகின்றனர்.
இதனால் ஒவ்வொரு முறை கால்வாய் பகுதியில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும்போதும் துர்நாற்றம் மற்றும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை பரவுவதால் நீர் ஊற்றுக்கும் சிக்கல் உண்டாகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் கால்வாய்களை அவ்வப்போது துார்வாருவதுடன், கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயம் மேம்பட ஆவண செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

