/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேந்தோணி கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள் விவசாயிகள் வேதனை
/
வேந்தோணி கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள் விவசாயிகள் வேதனை
வேந்தோணி கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள் விவசாயிகள் வேதனை
வேந்தோணி கண்மாயில் கொட்டப்படும் கழிவுகள் விவசாயிகள் வேதனை
ADDED : செப் 09, 2024 05:04 AM

பரமக்குடி : பரமக்குடி அருகே வேந்தோணி கண்மாயில் அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கண்மாய் நீரை மட்டுமே நம்பி உள்ளது. வைகை ஆறு பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் பல நுாறு கண்மாய்களை அடைகிறது.
கடந்த சில ஆண்டுகளாக புதிய ரோடு அமைத்தல் மற்றும் கழிவுகளை கொட்டும் இடம் என ஒட்டு மொத்தமாக நீர் நிலைகளை அரசின் பல்துறைகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் முறையாக வழிந்தோட நீர் வழித்தடம் இன்றி ஆங்காங்கே தேங்கும் சூழல் உள்ளது.
வேந்தோணி கண்மாய் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கொடுத்து வருவதுடன், அப்பகுதி மக்களின் தாகம் தீர்க்கும் நீரூற்றாக உள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து வகை குப்பை கொட்டும் இடமாக மாற்றி உள்ளனர்.
இதனால் மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் வாழ தகுதியற்ற நீர் நிலையாக மாறி உள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் துர்நாற்றம் வீசுவதுடன், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குளிக்க பயன்படுத்தப்பட்ட கண்மாய் ஆபத்தான இடமாக மாறி உள்ளது.
விவசாயிகள் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே ஒட்டுமொத்த மனித குலத்தின் ஜீவாதாரமாக உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க மாவட்ட கலெக்டர், துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.