/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருட்கள் பெறலாம்
/
விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருட்கள் பெறலாம்
விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருட்கள் பெறலாம்
விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனையில் வேளாண் இடுபொருட்கள் பெறலாம்
ADDED : செப் 18, 2024 04:48 AM
ராமநாதபுரம், : வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனையில் சாகுபடிக்குரிய இடு பொருட்களை பெறலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவகாலம் தொடங்கி வட்டாரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், நுண்ணுாட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடு பொருட்கள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயத்தில் மானியத்தில் வழங்கப்படுகிறது.
அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுப்பொருட்களை பணமில்லா மின்னணு பரிவர்த்தனையில் அரசு கணக்கில்செலுத்தி பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மையங்களுக்கு மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பொருட்களுக்கான முழுத்தொகை அல்லது பங்களிப்பு தொகையை ஏ.டி.எம்., கார்டில் செலுத்தி பயனடையுமாறு வேளாண் இணை இயக்குநர்(பொ) முருகேசன் தெரிவித்துள்ளார்.