/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்னணு பண பரிவர்த்தனை முறையில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறலாம்
/
மின்னணு பண பரிவர்த்தனை முறையில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறலாம்
மின்னணு பண பரிவர்த்தனை முறையில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறலாம்
மின்னணு பண பரிவர்த்தனை முறையில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறலாம்
ADDED : செப் 10, 2024 11:57 PM
திருவாடானை : மின்னணு பண பரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கீதாஞ்சலி கூறினார். அவர் கூறியதாவது:
திருவாடானை வட்டாரத்தில் இடுபொருள் கிடங்கு செயல்பட்டு வருகிறது. தற்போது திருவாடானை வேளாண் கிடங்கில் விவசாயிகள் வேளாண் இடுபொருட்களை பெற எளிமைபடுத்தும் வகையில் மின்னணு பரிவர்த்தனை வசதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்திற்கு தேவையான நெல், உளுந்து, உயிர் உரங்கள், ஜிங்சல்பேட் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இடுபொருட்களை பெற மானியத் தொகை போக விவசாயிகளின் பங்குத் தொகையை பணமாக செலுத்தி இடுபொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதனை எளிமைப்படுத்தும் வகையில் இம்மாதம் முதல் மின்னணு பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற்று கொள்ளும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவையை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி ஏ.டி.எம்., கூகுள் பே, போன் பே மூலம் விவசாயிகள் பங்குத் தொகை செலுத்தி இடுபொருட்களை பெற முடியும்.
இதற்காக அலுவலகத்தில் பி.ஓ.எஸ்., இயந்திரம் வைக்கபட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் இடுபொருட்களை பெற இந்த எளிய முறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.