/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளை துவங்க முடிவு
/
விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளை துவங்க முடிவு
ADDED : ஆக 01, 2024 11:11 PM
திருவாடானை : விதைப்பு பணிகள் துவங்க இருப்பதால் விதை நெல் இருப்பு மற்றும் விலை விபரங்களை வேளாண் அலுவலர்கள் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் ஆண்டு தோறும் 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆடி மாதம் துவங்கி காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
ஆடி பட்டத்திற்கு தயாராகியுள்ள விவசாயிகள் இன்னும் சில நாட்களில் விதைப்பு பணிகளை துவங்கவுள்ளனர்.
பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுவதால் 80 சதவீதம் விவசாயிகள் நேரடியாக வயல்களில் விதைக்கின்றனர்.
விளை நிலங்களில் விதைப்பு செய்வதற்கு ஏற்ற வகையில் கோடை மழை கை கொடுத்ததால் உழவுப் பணிகளை முடித்து விதைக்க தயாராகி வருகின்றனர்.
திருவாடானை அருகே செங்கமடை விவசாயிகள் கூறியதாவது:
தனியார் கடைகளில் விதை நெல் விற்பனைக்கு தயாராக உள்ளது.
ஆகவே வேளாண் அலுவலகம் சார்பில் விதை நெல் ரகம், இருப்பு விபரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போது தான் விதை நெல் ரகங்களை தேர்வு செய்து பணிகளை துவக்க முடியும் என்றனர்.