/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனி அடையாள எண் பதிவு செய்ய விவசாயிகள் ஆர்வம்
/
தனி அடையாள எண் பதிவு செய்ய விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 02, 2025 05:50 AM
திருவாடானை: விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணிகள் நடக்கிறது. திருவாடானை தாலுகாவில் 6000 பேர் பதிவு செய்துள்ளனர். ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவல்களை அடிக்கடி சரிபார்க்க வேண்டியது உள்ளது. இதில் நேர விரயம், பிரச்னைகள் ஏற்படுகிறது.
இவை ஏற்படாமல் இருக்க விவசாயிகளின் நலன் கருதி அடையாள எண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் இதற்கான பணிகள் பிப்.10 முதல் துவங்கியது. அனைத்து ஊராட்சி அலுவலகம், இ-சேவை மையம் மற்றும் வேளாண் அலுவலகத்தில் இப் பணிகள் நடக்கிறது.
விவசாயிகள் தங்களது ஆதார் எண், சுயவிபரங்கள், பட்டா சிட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கபட்ட அலைபேசி எண், ரேஷன் கார்டு போன்ற தகவல்களை நேரில் சென்று தெரிவிக்கின்றனர். இது குறித்து வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் இதுவரை 6000 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். கடைசி தேதி அறிவிப்பு இல்லை. இருந்த போதும் மார்ச்சுக்குள் விவசாயிகள் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றனர்.