ADDED : மே 02, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவிலில் விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் துரைபாண்டி தலைமை வகித்தார். செயலாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார்.
சங்கத்தில் கால்வாய் மற்றும் கண்மாய் பணிகள் குறித்து திட்டமிட்ட விஷயங்களை மாவட்ட கலெக்டரிடம் பகிர்ந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் வாசுகி தீர்த்த குளம் பராமரிப்பு குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டன.
சங்க வரவு, செலவு வாசித்து உறுதி செய்யப்பட்டது. அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குழு உறுப்பினர் மலைச்சாமி நன்றி கூறினார்.

