/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் துார்வாரி ஆழப்படுத்த நிதி ஒதுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : ஆக 08, 2024 04:29 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் முதல் லாந்தை வரை பெரிய கண்மாய் கரைப்பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஷட்டர்களை மராமத்து செய்து துார்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் முன்னாள் தலைவர் பாலசுந்தர மூர்த்தி கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் பெரிய கண்மாய் வைகை ஆற்று நீரால் நிரம்புகிறது. 3962 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 10 ஊருணிகள், 20 கண்மாய்கள் பயனடைகிறது. பெரிய கண்மாய் வடக்கு பகுதியில் 1100 அடி தெத்து முற்றிலும் சேதமடைந்து விட்டது. புதிதாக 4 ஷட்டர்கள் அமைக்க வேண்டும்.
தென் கலுங்கிலிருந்து செல்லும் 8 நீர்மடை வழிகள் புத்தேந்தல் அணைக்கட்டிலுள்ள 14 ஷட்டர்கள் பழுதாகியும், மருச்சுக்கட்டி அணை அமைத்து 50 ஆண்டுகள் மேலாகி விட்டதால் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்ட நிதி ஒதுக்க வேண்டும்.
கண்மாய்க்கரை சிமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக உள்ளன. 20 அடிக்கு மேல் மேடாகியுள்ளன. எனவே பெரிய கண்மாயை துார்வார வேண்டும்.
இது தொடர்பாக சட்டசபை மனுக்கள் குழுவிற்கு மனு அனுப்பியுள்ளேன் என்றார்.