/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருத்தி செடிகளை காப்பாற்ற பண்ணை குட்டை நீரை பயன்படுத்தும் விவசாயிகள்

ADDED : மே 04, 2024 05:07 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் அறுவடைக்கு பின்பு இருதயபுரம், புல்லமடை, வல்லமடை, சவேரியார்பட்டினம், செங்குடி, மங்கலம், நெடும்புளிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
பருத்தி செடிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மகசூல் கொடுத்து வருகின்றன. செடிகளில் இருந்து பறிக்கப்படும் பஞ்சுகளை தரம் பிரித்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சுட்டெரித்து வரும் கடும் வெயிலால் தண்ணீர் பாசனம் இல்லாத பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்திச் செடிகள் வெயிலுக்கு வதங்கி கருகி விட்டன.
இந்நிலையில், இருதயபுரம், நெடும்புளிக்கோட்டை, மங்கலம், வல்லமடை, புல்லமடை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளுக்கு அப்பகுதியில் உள்ள கண்மாய், மற்றும் பண்ணை குட்டை நீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி செடிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் இன்னும் சில வாரங்களுக்கு பருத்திச் செடிகள் மகசூல் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.