/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இயற்கை உரத்திற்காக ஆடுகள் கிடை அமைக்கும் விவசாயிகள்
/
இயற்கை உரத்திற்காக ஆடுகள் கிடை அமைக்கும் விவசாயிகள்
இயற்கை உரத்திற்காக ஆடுகள் கிடை அமைக்கும் விவசாயிகள்
இயற்கை உரத்திற்காக ஆடுகள் கிடை அமைக்கும் விவசாயிகள்
ADDED : மார் 31, 2024 03:31 AM
முதுகுளத்துார், : -முதுகுளத்துார் பகுதியில் இயற்கை உரத்திற்காக விவசாயிகள் ஆடுகள் கிடை அமைத்து வருகின்றனர்.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்கின்றனர். அறுவடைக்கு பின் சில விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் மிளகாய், பருத்தி உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். கடந்த ஆண்டு பருவமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி பாதிக்கப்பட்டது.
தற்போது நிலத்தை உழவு செய்து தரிசாக விட்டுள்ளனர். இதனால் முதுகுளத்துார் அருகே கொடுமலுார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலத்தில் இயற்கை உரத்திற்காக வெளி மாவட்டங்களில் இருந்து மேய்ச்சலுக்காக கொண்டுவரப்படும் ஆடுகளை தங்களது நிலத்தில் கிடை அமைத்து இயற்கை உரத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் விவசாய நிலங்களில் கிடை அமைத்து வருவதும் அதிகரித்துள்ளது.

