/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
/
வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
ADDED : செப் 09, 2024 05:21 AM
திருவாடானை : திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் கிடைக்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா திகழ்கிறது. 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. திருவாடானை தாலுகாவில் உயர் விளைச்சல் தரும் சன்ன ரகங்கள் டீலக்ஸ் பொன்னி, ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., போன்ற நெல் விதைகளை விவசாயிகள் விதைப்பது வழக்கம்.ஆனால் வேளாண் அலுவலகத்தில் போதுமான விதை நெல் கையிருப்பு இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
ஆனால் வழக்கமாக விதைக்கும் நிலங்களுக்கே போதுமான விதைகள் வேளாண் அலுவலகத்தில் கையிருப்பு இல்லாததது கவலையாக உள்ளது. தற்போது திருவாடானை தாலுகாவில் நேரடி நெல் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளது.
டீலக்ஸ், ஆர்.என்.ஆர்., ஆகிய விதை நெல் அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆனால் வேளாண் அலுவலகத்தில் விதை நெல் கிடைக்காததால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விதைப்பிற்கு தேவையான விதை நெல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.