sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆடித்திருவிழா: ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்

/

ஆடித்திருவிழா: ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்

ஆடித்திருவிழா: ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்

ஆடித்திருவிழா: ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பில் மாற்றம்


ADDED : ஜூலை 31, 2024 09:09 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 09:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழாவையொட்டி நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 29 முதல் ஆக.14 வரை நடக்கிறது. ஆக.4ல் ஆடி அமாவாசையன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து 5:00 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த வெள்ளித் தேரில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா நடக்கிறது.

ஆக.8ல் ஆடி தபசு அன்று அதிகாலை 2:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 2:30 முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், காலை 5:55 மணிக்கு அம்மன் கமல வாகனத்திலும், காலை 11:00 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், மதியம் 3:00 முதல் 3:30 மணி வரை சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து அன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும்.

ஆக.12ல் மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். இதன் பின் நடை திறந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆக.14ல் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 2:30 முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, தொடர்ந்து கால பூஜை நடக்கிறது.

தொடர்ந்து காலை 6:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகின்றனர். அங்கு மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கும். அன்று காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us