/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளைஞர்கள் தொழில் துவங்க வேளாண் துறையில் நிதியுதவி
/
இளைஞர்கள் தொழில் துவங்க வேளாண் துறையில் நிதியுதவி
ADDED : ஜூலை 22, 2024 04:34 AM
ராமநாதபுரம்,: வேளாண் துறை சார்பில் பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.
மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2024---25ல் வங்கி கடன் உதவியுடன் கூடிய ஏதாவது வேளாண் சார்ந்த தொழில் துவங்க பட்டதாரி ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற வயது 21 முதல் 40க்குள், இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் கணிணி திறன் பெற்றிருக்கவேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெறமுடியும். வங்கி கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டுகள், பாஸ்போர்ட் போட்டோவங்கி கணக்கு புத்தகம் நகல், கடன் ஒப்புதல் ஆவணம், துவங்க உள்ள தொழில் பற்றிய விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
விருப்பமுள்ள பட்டதாரி இளைஞர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அருகேயுள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம் என வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்துள்ளார்.