/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொதுப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் தினமலர் நாளிதழ் செய்தியுடன் புகார்

ADDED : செப் 10, 2024 05:09 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சோழந்துாரைச் சேர்ந்த பானை மணி எம்.ஜி.ஆர்., ஏழைகள் முன்னேற்ற கழகம் சார்பில் தினமலர் நாளிதழில் வெளியான செய்திகளுடன் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மாவட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மனு அளித்தார். அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் பற்றாக்குறை, படிக்கட்டுகளை மாணவர்கள் சாகச பயணம், தொண்டி கிழக்கு அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் அவதி உள்ளிட்ட தினமலர் நாளிதழில் செய்திகளுடன் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து பொதுப்பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தினமும் பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடன் தீர்வு காண வேண்டும் என பானை மணி வலியுறுத்தினார்.