
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிநோக்கம்: சாயல்குடி தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் மற்றும் தீப்பிடித்தால் அவற்றை எளிதாக அணைப்பது குறித்து ஒத்திகையுடன் செயல் விளக்கம் அளித்தனர். சாயல்குடி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் முத்து, தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

