/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரப்பன்வலசை தோட்டத்தில் தீ விபத்து: கருகிய பனை மரங்கள்
/
பிரப்பன்வலசை தோட்டத்தில் தீ விபத்து: கருகிய பனை மரங்கள்
பிரப்பன்வலசை தோட்டத்தில் தீ விபத்து: கருகிய பனை மரங்கள்
பிரப்பன்வலசை தோட்டத்தில் தீ விபத்து: கருகிய பனை மரங்கள்
ADDED : ஆக 25, 2024 10:51 PM

உச்சிப்புளி:
உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை தோட்டத்தில் தீப்பற்றியதில் 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் கருகின. தீயணைப்புத்துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
பிரப்பன்வலசையில் உள்ள குளோபல் மெட்ரிக் பள்ளி அருகே மருது கோவில் அருகே தோட்டப்பகுதியில் நேற்று மாலை 5:00 மணியளவில் தீப்பற்றியது. காற்று வேகமாக வீசியதன் காரணமாக பனை ஓலை பொருட்கள் கீழே விழுந்து காய்ந்து சருகு போல் இருந்ததால் தீ மளமளவென பற்றியது. அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பனைமரங்கள் தீயில் கருகின. மண்டபம் தீயணைப்புத்துறையினர் இரண்டுமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தோட்டத்தில் யாரும் புகை பிடித்து போட்டதால் ஏற்பட்டதா, குப்பையில் வைத்த தீ பற்றிக்கொண்டதா என உச்சிபுளி போலீசார் விசாரிக்கின்றனர்.