/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
/
கிணற்றில் விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ADDED : ஆக 01, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் ரோட்டில் செங்கல் சூளை அருகே தண்ணீர் இல்லாத கிணறு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அந்த கிணற்றில் ஆண் மயில் ஒன்று எதிர்பாராமல் தவறி விழுந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து தலைமையில் வீரர்கள் சென்றனர்.
கிணற்றில் விழுந்து தத்தளித்த ஆண் மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டு சாயல்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.