ADDED : ஜூலை 05, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இன்னிசை வேந்தர் வாசு பங்கேற்று நகைச்சுவை சொற்பொழிவாற்றினார்.
கல்லுாரியின் முன்னாள் மாணவரும், ஆர்.கே.இன்போடெக் உரிமையாளர் ராம்குமார், கீழக்கரை தாசில்தார் ராமசுப்பிரமணியன், சவுதி அரேபியாவில் இறால் நிறுவன பராமரிப்பு உதவி மேலாளர் செய்யது காசிம், கல்லுாரி துணை முதல்வர் கணேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
இயற்பியல் துறை விரிவுரையாளர் இளமுருகு வரவேற்றார். விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறை தலைவர் முத்துக்குமார் செய்திருந்தார்.
