ADDED : மே 22, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே மன்னார் வளைகுடா கடலில் மீன்கள் பிடிக்கப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் செல்கிறது. இந்நிலையில் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் உள்ள நிலையில் நாட்டுப்படகு மூலமாக மீன் பிடிக்கின்றனர். தற்போது பலத்த காற்றின் காரணமாக குறைவான நாட்டு படகுகள், பைபர் படகுகளில் மீன் பிடிக்கின்றனர்.
இதனால் ரூ.250க்கு விற்ற விளை மீன் ரூ.400க்கு விற்பனையானது. இதே போன்று இதர மீன்களும் விலை ரூ.150 முதல் 200 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
––
