நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : ஏர்வாடி நடுத்தெருவை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர் 42.
நேற்று காலை 6:00 மணிக்கு விசைப்படகில் சின்ன ஏர்வாடியில் இருந்து மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிப்பதற்காக 10 மீனவர்களுடன் சென்றார்.
மாலை 5:00 மணிக்கு வலையில் சிக்கிய மீனை இழுத்த போது மாரடைப்பால் படகில் உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மரைன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

